இந்தியா

அசாமில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியது

6th Aug 2020 11:58 AM

ADVERTISEMENT

 

அசாமில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் மேலும் 2,284 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்த ஒட்டுமொத்த பாதிப்பு 50,445 ஆக உள்ளது என்று மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

புதிதாக பாதிக்கப்பட்டவைகளில் முக்கியமாக குவஹாத்தி கம்ரூப் (மெட்ரோ) 362 ஆகவும், திப்ருகார், நாகான் மற்றும் கம்ரூப் (கிராமப்புறம்) மாவட்டங்களில் தலா 100 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகியுள்ளன. 

ADVERTISEMENT

மேலும், நோயிலிருந்து மீட்கப்பட்டும் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 1,471 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 35,892 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

தற்போது 14,429 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 121 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT