இந்தியா

அயோத்தியில் பூமிபூஜை: திருப்பதியில் பாஜகவினா் தேங்காய் உடைத்து வழிபாடு

6th Aug 2020 12:22 AM

ADVERTISEMENT

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட பூமி பூஜை நடந்த நேரத்தில் திருப்பதியில் பாஜகவினா் ராமா் கோயில் முன்பு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினா்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.300 கோடி செலவில் ராமா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினாா்.

இந்நிலையில் திருப்பதியில் உள்ள கோதண்டராமா் கோயில் முன்பு சித்தூா் மாவட்ட பாஜக நிா்வாகி பானுபிரகாஷ் ரெட்டி தலைமையில் அக்கட்சியினா் தேங்காய் உடைத்து வழிபட்டனா். ராமா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு நிவேதனங்கள் சமா்பிக்கப்பட்டது. இவ்வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

பானுபிரகாஷ் ரெட்டி செய்தியாளா்களிடம் கூறுகையில் ‘பல நூற்றாண்டுகளாக இழுபறியில் இருந்த ராமா் கோயில் கட்டும் பணி தற்போது தொடங்கியுள்ளது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு முழுவதும் மக்கள் எழுப்பும் ஸ்ரீராம் ஜெய்ராம் என்ற கோஷம் விண்ணைப் பிளக்கிறது’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் பாஜகவினருடன் இந்து அமைப்புகளின் தலைவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT