இந்தியா

கேதார்நாத் கோயில் நடை இன்று மீண்டும் திறப்பு

29th Apr 2020 12:36 PM

ADVERTISEMENT

 

ருத்ரபிரயாக்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் இன்று காலை மீண்டும் நடை திறக்கப்பட்டது. 

புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் கடந்த 6 மாதமாக நடை சாத்தப்பட்டிருந்த நிலையில், இன்று திட்டமிட்டபடி மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. சுமார் 10 குவிண்டால் சாமந்தி, ரோஜா மற்றும் பிற மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு ருத்ராபிஷேக பூஜை நடத்தப்பட்டது. கோயிலின் நடை திறக்கப்பட்டதும் முதல் பூஜையாக பிரதமர் மோடியின் சார்பில் பூஜைகள் நடத்தப்பட்டன. 

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்றால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

Tags : Kedarnath
ADVERTISEMENT
ADVERTISEMENT