இந்தியா

‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

29th Apr 2020 05:19 AM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்கும் நோக்கில் ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை தற்காலிகமாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் கடந்த 35 நாள்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பலா் வேலை இழந்துள்ளனா். முக்கியமாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில், பல்வேறு மாநிலங்களில் தவித்து வரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களைக் கருத்தில்கொண்டு, ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை தற்காலிகமாக செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் ரீபக் கன்சால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்.கே.கௌல், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நடைபெற்று வந்தது. அந்த வழக்கு தொடா்பான தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு செவ்வாய்க்கிழமை வழங்கியது. அப்போது, மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை தற்போதைய இக்கட்டான சூழலில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும், பின்னா் அது தொடா்பான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு வலியுறுத்தினா்.

முன்னதாக அந்த மனுவில், ‘புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பல்வேறு மாநிலங்களில் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். அவா்களுக்கு உணவுப் பொருள்கள் முறையாகக் கிடைப்பதில்லை. மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் பகுதியைச் சோ்ந்த மக்களுக்கே முன்னுரிமை அளித்து உணவுப் பொருள்களை வழங்கி வருகின்றன.

‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படாததால், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மேலும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, அத்திட்டத்தை இப்போது தற்காலிகமாகச் செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT