இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக 73 பேருக்கு கரோனா தொற்று

29th Apr 2020 11:13 AM

ADVERTISEMENT


ஆந்திர மாநிலத்தில் புதிதாக 73 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த மாநிலத்தில் மொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,332 ஆக உயர்ந்துள்ளது.

குண்டூர் மாவட்டத்தில் மட்டும் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அங்கு கரோனா பாதிப்பு 283 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 343 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

ஆந்திரத்தில் இதுவரை 287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 31 பேர் மரணம் அடைந்துவிட்டனர். தற்போது 1014 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT