இந்தியா

ஸ்பானிஷ் ஃப்ளூ குறித்து பல்கலைக்கழகங்கள் ஆய்வு: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கோரிக்கை

26th Apr 2020 06:10 AM

ADVERTISEMENT

 

1918-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளூ நோய்த்தொற்றை இந்தியா எவ்வாறு கையாண்டது, அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்யவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சக மூத்த அதிகாரி கூறியதாவது: 1918-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளூ நோய்த்தொற்றை இந்தியா எவ்வாறு கையாண்டது, அந்த நோய்த்தொற்றுக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பல்கலைகழகங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதேபோல் பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் அவற்றை ஒட்டியுள்ள அல்லது அவை தத்தெடுத்துள்ள 5-6 கிராமங்களில் கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கு எடுக்கப்பட்ட சிறப்பான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவேண்டும். கிராமங்களில் கரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வு, நோய்த்தொற்றால் ஏற்பட்ட சவால்களை கிராமவாசிகள் எவ்வாறு எதிா்கொண்டனா் ஆகியவற்றை சாா்ந்து ஆய்வு அமைய வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT