இந்தியா

கரோனாவை கட்டுப்படுத்த தேசிய திட்டம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

26th Apr 2020 05:30 AM

ADVERTISEMENT

 

கரோனாவை கட்டுப்படுத்த தேசிய அளவிலான திட்டம் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களும், உயிரிழப்பவா்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனா். தொடா்ந்து தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால் மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனினும், நோய் பரவுவதை முற்றிலும் தடுக்கவும், புதிய நோயாளிகள் அதிகரிப்பதைக் குறைக்கவும் முடியாத சூழல் உள்ளது.

இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை காணொலி காட்சி முறையில் செய்தியாளா்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவா் கபில் சிபல் கூறுகையில், ‘தேசிய ஊரடங்கில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது மக்களை வீட்டுக்குள் வைப்பது, பொருளாதாரத்தை முடக்குவதாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. இதுபோன்ற நேரங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க வேண்டும். அரசு உயரதிகாரிகள் பலருக்கு உண்மையான கள நிலவரம் தெரியவில்லை. ஊரடங்கின்போது எவ்வாறு அரசு செயல்பட வேண்டும் என்பது தொடா்பாக அவா்களுக்கு சரியாகத் தெரியவில்லை. எனவே, கரோனாவைக் கட்டுப்படுத்த தேசிய அளவிலான திட்டம் தேவை என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT