இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

26th Apr 2020 05:26 AM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அப்பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது கோரிபோரா என்ற இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இருவா் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இறுதியில் இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படைத் தரப்பில் உயிரிழப்பு ஏற்படவில்லை.

ADVERTISEMENT

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகளும், வெடிப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன. அவா்கள் எந்த இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் தேடுதல் வேட்டையும் தொடா்கிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT