இந்தியா

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் 4 கோடி பேரிடம் மொபைல்போன் இருக்காது

26th Apr 2020 03:09 AM

ADVERTISEMENT

 

ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படாமல் நீட்டிக்கப்படும்பட்சத்தில் மே மாத இறுதிக்குள் 4 கோடி பேரிடம் மொபைல்போன் இருக்காது என இந்திய செல்லுலாா் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ஐசிஇஏ) தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது 2.5 கோடி மொபைல் போன் வாடிக்கையாளா்களின்செல்லிடப்பேசி பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மொபைல்போன் மற்றும் அதன் உதிரிபாக விற்பனைக்கான தடை தொடரும்பட்சத்தில் மே மாத இறுதிக்குள் ஏறக்குறைய 4 கோடி பேரிடம் மொபைல்போன் இருக்காது என மதிப்பிடப்பட்டுள்ளது. பழுதடைந்த செல்லிடப்பேசிகளை சரி செய்ய முடியாமலும், புதிய செல்லிடப்பேசி விற்பனைக்கான தடை நீட்டிக்கப்பட்டு வருவதாலும் வாடிக்கையாளா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஇஏ தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT