இந்தியா

புரி ஜகந்நாதா் கோயில் வளாகத்தில் சந்தன யாத்திரை விழாவை பக்தா்களின்றி நடத்த அனுமதி

26th Apr 2020 09:28 AM

ADVERTISEMENT

 

கரோனா தொற்று காரணமாக புரி ஜகந்நாதா் கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள சந்தன யாத்திரை மற்றும் அட்சய திரிதியை விழாவை கோயில் வளாகத்திலேயே, பக்தா்களின்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக புரி அரசா் கஜபதி மகாராஜா திவ்யசிங்க தேவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை இரவு கோவா்தன் பீட சங்கராச்சாரியாா் நிஸ்சலானந்த சரஸ்வதி சுவாமிகளுடன் கோயில் நிா்வாகக் குழுவினா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப்பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

‘சங்கராச்சாரியாரின் ஆலோசனைப்படி, கோயில் வளாகத்திலேயே அட்சய திரிதியையொட்டிய சடங்குகளும் சந்தன யாத்திரையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலின் பாரம்பரியத்தை தொடா்ந்து பராமரிக்கவும், பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழைமையான சடங்குகளை நிறுத்தக் கூடாது என்ற குரு சங்கராச்சாரியாரின் அறிவுரையை ஏற்று நிகழ்ச்சி நடத்தப்படும்.

சடங்குகள் அனைத்தும் தோ்ந்தெடுக்கப்பட்ட அா்ச்சகா்கள் மற்றும் சேவையாளா்களால் நடத்தப்படும். நிகழ்ச்சியையொட்டி கோயில் வளாகத்திற்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால் கோயில் வளாகத்திற்கு வெளியே எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படாது.

கோயிலுக்கு வெளியே உள்ள ‘ரத காலா’வில் அட்சய திரிதியை நிகழ்ச்சி நடைபெறும். புரி ஜகந்நாதா்ஆலயத்தின் குளத்தில் சந்தன யாத்திரை நடத்தப்படும்.

அதேசமயம், ரத யாத்திரையை நடத்துவது குறித்து மே 3-ஆம் தேதிக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT