இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்தது: 2 காவலர்கள் உள்பட 3 பேர் பலி

26th Apr 2020 01:09 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தின் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 காவல்துறையினர் உள்பட 3 பேர் பலியாகினர். 

உத்தரப் பிரதேச மாநிலம், பாண்டா எல்லையில் இருந்து காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் யமுனை ஆற்றில் படகில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இவர்களுடைய படகு ஃபதேபூர் மாவட்டத்தில் திடீரென கவிழ்ந்தது. 

இந்த சம்பவத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் ராம்ஜீத் சோன்கர்(52), காவலர் சஷிகாந்த்(25) மற்றும் படகு ஓட்டுனர் ரவி(27) ஆகியோர் நீரில் மூழ்கி பலியானார்கள். மற்றொரு காவலரான நிர்மல் யாதவ் நீந்தி கரையை வந்தடைந்தார். 

கடும் சூறாவளி காரணமாக படகு விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT