இந்தியா

கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி

26th Apr 2020 07:26 PM

ADVERTISEMENT


கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

"கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 123 ஆக உள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களுள் ஒரு மருத்துவர் உட்பட மூன்று பேர் மருத்துவ ஊழியர்கள். 342 பேர் குணமடைந்துள்ளனர்.  

19,665 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 462 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்."

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT