இந்தியா

விரைவு பரிசோதனை கருவியில் கரோனா இருப்பதாக வந்தவருக்கு கரோனா இல்லை

20th Apr 2020 02:07 PM

ADVERTISEMENT


உத்தரப்பிரதேச மாநிலத்தில் அறிகுறியுடன் இருந்தவருக்கு விரைவு பரிசோதனை கருவியில் கரோனா இருப்பதாக முடிவு வந்த நிலையில், மருத்துவப் பரிசோதனையில் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உத்தரப்பிரதேச மருத்துவ முதன்மை அதிகாரி அலோக் பாண்டே கூறுகையில், அபுபக்நகரைச் சேர்ந்த 38 வயது நபருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து, அவருக்கு விரைவு பரிசோதனை கருவி மூலம் ஞாயிறு மாலை பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பதாக முடிவு வந்தது. இதையடுத்து உடனடியாக அவரது ரத்த மற்றும் உமிழ்நீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த சோதனை முடிவுகள் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு வந்தது. அதில் அவருக்கு கரோனா இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், அவர் இருக்கும் பகுதி முழுவதும் முன்னெச்சரிக்கை நடவக்கையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று பாண்டே தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT