இந்தியா

மின் விநியோக நிறுவனங்களுக்கு சலுகை: மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல்

20th Apr 2020 04:44 AM

ADVERTISEMENT

 

வருவாய் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்க மத்திய அமைச்சரவை வரும் வாரத்தில் ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோயத்தொற்று பரவலால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. நிறுவனங்கள் செயல்படாததால் மின்சாரத்துக்கான தேவை பெரிதும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, மின் விநியோக நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளன.

ADVERTISEMENT

அந்த நிறுவனங்களை மீட்டெடுக்கும் வகையில் சலுகை திட்டங்களை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.இதற்கு, மத்திய அமைச்சரவை வரும் வாரத்தில் ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில், மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை செலுத்த மாற்று முதலீட்டு நிதியத்தை உருவாக்கவும் இந்த சலுகை தொகுப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT