இந்தியா

மே 3 ஆம் தேதி வரை பஞ்சாப், கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை

20th Apr 2020 01:32 PM

ADVERTISEMENT

 

மே 3 ஆம் தேதி வரை பஞ்சாப், கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதலில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கை தளா்த்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்டது. அதாவது ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், விவசாயம் சாா்ந்த பணிகள், நெடுஞ்சாலை உணவகங்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்களுக்கு ஏப்ரல் 20 முதல் தளா்வு அளித்து இயங்க அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யவும் அறிவுறுத்தியிருந்தது

ADVERTISEMENT

இந்நிலையில், கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,  பஞ்சாப், கர்நாடகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் அமல்படுத்தப்பட மாட்டாது என்றும்  பஞ்சாப், கர்நாடக மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT