இந்தியா

ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு கரோனா

20th Apr 2020 01:04 PM

ADVERTISEMENT

 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் புதிதாக்கப் பிறந்த குழந்தைக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாக்பூரில் பாஸ்னி ஆரம்பச் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு சனிக்கிழமை குழந்தை பிறந்துள்ளது. 

ஏற்கெனவே, குழந்தையின் தாய், தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், குழந்தையின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் குழந்தைக்கும் கரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக நாகூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி சுகுமார் காஷ்யப்ப தெரிவித்தார்.

ADVERTISEMENT

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் 62 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் நாகூரில் இதுவரை 59 பேர் கரோனா நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT