புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
புணேவைச் சேர்ந்த 25 வயதான கர்ப்பிணி, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் 16ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. குழந்தைக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கையாக குழந்தை தாயிடம் இருந்து பிரித்து தனி வார்டில் வைக்கப்பட்டிருப்பதாக புணேவின் சசூன் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.