இந்தியா

ஜோத்பூர் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவன்

20th Apr 2020 01:24 PM

ADVERTISEMENT

 

ஜோத்பூர்: ராஜஸ்தானின் ஜோத்பூர் அருகே ஜோயிந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோத்பூரில் உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு வந்த 5 வயது சிறுவன் ரோஹித், இன்று காலை விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முன்னதாக குழந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT