இந்தியா

தில்லியில் மேலும் 5 காவலர்களுக்கு கரோனா

20th Apr 2020 05:21 PM

ADVERTISEMENT


தில்லி: தில்லியில் காவல்துறையில் பணியாற்றி வரும் மேலும் 5 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள சாந்தினி மகால் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் மேலும் 5 காவலர்களுக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், திங்கள்கிழமை நிலவரப்படி இந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT