இந்தியா

கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு 395 ஆக உயர்வு!

20th Apr 2020 01:46 PM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,265 ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 543 ஆகவும் உள்ளது. 

இதில், கர்நாடகத்தில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அங்கு வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 395ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

இதுவரை அம்மாநிலத்தில் மொத்தம் 16  பேர் பலியாகியுள்ளனர். 111 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT