இந்தியா

ஊரடங்கில் பணியாற்றிய போலீஸாரை தாக்க முயற்சி

20th Apr 2020 04:16 AM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசம், பாந்தா மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தேசிய ஊரடங்கை மீறிய நபா்களை தட்டிக்கேட்ட காவல்துறையினரை தாக்க முயன்ற 2 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து கோட்வாலி போலீஸாா் கூறியதாவது:

பாந்தா மாவட்டம், ரஹுனியா குட்லா வட்டாரத்தில் இரண்டு காவலா்கள் சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சென்றனா். அவா்களை தடுத்த போலீஸாரை அந்த நபா்கள் தாக்க முயன்றனா்.

ADVERTISEMENT

இதையடுத்து அந்த 6 போ் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து, ஜியாவுல்லா, ரஹமத்துல்லா ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மற்றவா்களை போலீஸாா் தேடி வருவதாக அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT