இந்தியா

தாராவியில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மும்பை மாநகராட்சி

20th Apr 2020 10:11 PM

ADVERTISEMENT


மும்பை தாராவி குடிசைப் பகுதியில் புதிதாக 30 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தத் தகவலை மும்பை மாநகராட்சி இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தது. 

இதைத் தொடர்ந்து, தாராவியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. தாராவிப் பகுதியில் மட்டும் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT