இந்தியா

3 உயா்நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

20th Apr 2020 04:51 AM

ADVERTISEMENT

 

மும்பை, ஒடிஸா, மேகாலய உயா்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிப்பதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் குழுவின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி தீபாங்கா் தத்தாவை மும்பை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் சோமாதரை மேகாலய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது மேகாலய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள முகமது ரஃபீக்கை ஒடிஸா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்யவும் கொலீஜியம் பரிந்துரை செய்தது.

ADVERTISEMENT

கொலீஜியம் குழு எடுத்த முடிவுகள், உச்சநீதிமன்றத்தின் வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT