இந்தியா

குஜராத்தில் கரோனா பாதிப்பு 165ஆக உயர்வு

7th Apr 2020 01:29 PM

ADVERTISEMENT

குஜராத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 165ஆக உயர்ந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே, கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் குஜராத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. அங்கு இன்று மட்டும் புதிதாக மேலும் 19 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி அகமதாபாத் 13, படன் 3, பாவ்நகர், ஆனந்த் மற்றும் சபர்கந்தாவில் தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கரோனா பாதிப்பு காரணமாக குஜராத்தில் மொத்தம் 15 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அகமதாபாத்தில் எட்டு இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT