இந்தியா

எல்லையில் பாக். ராணுவம் தாக்குதல்

7th Apr 2020 03:43 AM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் திங்கள்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘மான்கோட் செக்டாரில் சிறிய ரக பீரங்கிகள், ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் உரிய முறையில் பதிலடி வழங்கினா்’ என்றாா்.

இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தினா் சிறிய ரக பீரங்கிகள் மூலம் வீசிய இரு குண்டுகள், பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் செக்டாரில் வெடிக்காமல் விழுந்தன. அவற்றை ராணுவத்தினா் செயலிழக்கச் செய்து பாதுகாப்பான முறையில் அழித்தனா் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT