இந்தியா

வீட்டுக்கு வரக்கூடாது: மருத்துவர்களுக்கு ஏற்படும் மற்றொரு நெருக்கடி

7th Apr 2020 10:25 AM

ADVERTISEMENT

சூரத்: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், தனக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அதனால் தான் வீட்டுக்கு வரக் கூடாது என்று அக்கம் பக்கத்தினர் மிரட்டுவதாகவும் குஜராத்தைச் சேர்ந்த மருத்துவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தன்னலம் கருதாமல் பணியாற்றி வரும் மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் கடவுளுக்கு நிகராகக் கொண்டாடினாலும், அவர்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் சஞ்சீவனி. கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய பணி அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நாங்கள் வீட்டுக்கு வரக் கூடாது, எங்களுக்கு நிச்சயம் கரோனா பாதித்திருக்கும், நாங்கள் வீட்டுக்கு வந்தால் கரோனா அக்கம் பக்கத்தினருக்கும் பரவும் என்று அவர்கள் அஞ்சுவதால், எங்களை வீட்டுக்கு வரக் கூடாது என்று மிரட்டுகிறார்கள்.

இது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் எங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT