இந்தியா

மும்பையில் 3 மருத்துவர்கள், 26 செவிலியர்களுக்கு கரோனா: மருத்துவமனைக்கு சீல்

7th Apr 2020 11:26 AM

ADVERTISEMENT

புணே: மத்திய மும்பைக்கு அருகே அமைந்துள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 3 மருத்துவர்கள், 26 செவிலியர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதாக பிரிஹன் மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு நோயாளிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது மற்றும் இரண்டு பேருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து அவர்கள் கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், அறிகுறியுடன் இருந்தவர்கள் மற்ற நோயாளிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்துதான் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

முன்னதாக இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த இரண்டு செவிலியர்களுக்கு கடந்த வாரம் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இது 29 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 மருத்துவர்களும் அடங்குவர்.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT