இந்தியா

தாம்பரத்தில் இருந்து விமானத்தில் புவனேஸ்வர் சென்ற மருத்துவ உபகரணங்கள்

7th Apr 2020 02:55 PM

ADVERTISEMENT


சென்னை: தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு மருத்துவப் பரிசோதனைக் கூடம் அமைக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்திய விமானப் படையின் 02 ஏன்-32 ரக விமானம் மூலம் சுமார் 3,500 கிலோ கிராம் எடை கொண்ட மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. புவனேஸ்வரத்தில் கரோனா பரிசோதனை செய்ய புதிதாக மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் அமைக்கவும் அதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களும் ஐசிஎம்ஆர்-ஆல் தாம்பரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் அமைக்க பயிற்சி பெற்ற நபர்களும் இந்த விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT