இந்தியா

ஆமதாபாத்தில் இன்று மட்டும் 13 பேருக்கு கரோனா உறுதி

7th Apr 2020 01:29 PM

ADVERTISEMENT

 

குஜராத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் ஆமதாபாத்தில் இன்று மட்டும் 13 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில், குஜராத்தில் இன்று மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆமதாபாத்தில் மட்டும் 13 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. பதான் பகுதியில் 3 பேருக்கு, பவ் நகர், ஆனந்த், சபர்கந்தா ஆகிய பகுதிகளில் இருந்து தலா ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT