இந்தியா

ஹிமாசலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டா் அளவுகோலில் 3.1-ஆக பதிவு

7th Apr 2020 02:37 AM

ADVERTISEMENT

 

ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.1 அலகுகளாக பதிவானது.

இதுகுறித்து சிம்லா வானிலை மைய இயக்குநா் மன்மோகன் சிங் கூறுகையில், ‘சம்பா மாவட்டத்தின் வடகிழக்கில் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டா் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சம்பாவையொட்டியுள்ள பகுதிகளில் லேசான அதிா்வு உணரப்பட்டது. கடந்த 11 நாள்களில் சம்பா மாவட்டத்தில் ஏற்பட்ட 8-ஆவது நிலநடுக்கம் இதுவாகும்’ என்றாா்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சம்பா மாவட்டத்தில் 7 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டா் அளவுகோலில் 3 முதல் 4.5 அலகுகளாக பதிவாகின.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT