இந்தியா

கரோனா: இந்தியாவில் பாதிப்பு 4,421; பலி எண்ணிக்கை 114 ஆனது

7th Apr 2020 11:07 AM

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,421-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 114-ஆக உயா்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, இந்தியாவில் 3,981 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

மகாராஷ்டிரத்தில் மட்டும் 748 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கரோனாவால் நோ்ந்த மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 45 ஆகும். தமிழகத்தில் தற்போது 621 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தில்லியில் 523 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. இதுவரை 325 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4.421 ஆக உயர்ந்துள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT