இந்தியா

கரோனா தனிமைப்படுத்தல் மையங்களை விமர்சித்த அஸ்ஸாம் எம்எல்ஏ கைது

7th Apr 2020 05:36 PM

ADVERTISEMENT

 

கௌஹாத்தி: கரோனா தனிமைப்படுத்தல் மையங்களை விமர்சித்த அஸ்ஸாம் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4858 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 137 பேர் பலியாகியுள்ளனர்.

இம்மாத துவக்கத்தில் பல்வேறு வெளிநாட்டினரின் பங்களிப்போடு தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களில், பெரும்பாலானோருக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனா தனிமைப்படுத்தல் மையங்களை விமர்சித்த அஸ்ஸாம் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸ்ஸாமில் செயல்படும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற கட்சியின் சார்பாக, நகூன் மாவட்டத்தில் உள்ள திங் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அமினுல் இஸ்லாம்.   

இவர் அஸ்ஸாமில் செயல்படும் கரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை மையங்களை விமர்சித்து சமீபத்தில் பேசியுள்ளார். அவர் தனது பேச்சில், ‘இந்த தனிமைப்படுத்தல் சிகிச்சை மையங்கள் சட்டவிரோத தடுப்பு மையங்கள் போல் செயல்படுகின்றன. இங்கு பணியாற்றுபவர்கள் தில்லி மாநாட்டில் கலந்துகொண்ட பின் அஸ்ஸாம் திரும்பியவர்களை அவமரியதையாகப் பேசுகின்றனர். அத்துடன் இவர்கள் நலமாக இருப்பவர்களுக்கும் ஊசிகள் போட்டு அவர்களை நோயாளிகள் போல் காட்டுகின்றனர்’ என்று விமர்சிதிருந்தார்.

இவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் திங்கள் இரவு இவரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போலீசார் செவ்வாய் காலை முறைப்படி கைது செய்தனர். இதுகுறித்து பேரவை சபாநாயகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT