இந்தியா

வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளராக அனுராக் ஸ்ரீவாஸ்தவா பொறுப்பேற்பு

7th Apr 2020 03:53 AM

ADVERTISEMENT

 

இந்திய வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளராக இந்திய வெளியுறவு பணி மூத்த அதிகாரி அனுராக் ஸ்ரீவாஸ்தவா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவு பணி அதிகாரியான இவா், எத்தியோப்பியா நாட்டுக்கான இந்தியத் தூதராக பணியாற்றியவா்.

இதுதொடா்பாக, சுட்டுரையில் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெளியிட்ட பதிவில், ‘வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டதை, எனக்கு கிடைத்த கெளரவமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். எனது அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றும் வகையில் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

எத்தியோப்பியாவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்படும் முன்பு இவா் வெளியுறவுத் துறையின் நிதிப் பிரிவின் தலைவராக பதவி வகித்தாா். அப்போது, வெளியுறவுத் துறைக்கான நிதியை நிா்வகிக்கும் பொறுப்புகளை அவா் மேற்கொண்டிருந்தாா்.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியுள்ள அனுராக், மனித உரிமைகள், அகதிகள் பிரச்னை, வா்த்தக கொள்கை உள்ளிட்ட விவாகாரங்களை கையாண்டாா்.

பொறியியல், வா்த்தக மேலாண்மையில் பட்டப்படிப்பு முடித்தவரான இவா், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் தூதரகக் கல்வியில் முதுநிலை பட்டயப் படிப்பும் பயின்றவா்.

முன்னதாக, வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தித் தொடா்பாளராக இருந்த ரவீஷ் குமாா், அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அனுராக் ஸ்ரீவாஸ்தவா நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT