இந்தியா

70,000 லிட்டா் கைசுத்திகரிப்பான் தயாரிப்பில் பகாா்டி

7th Apr 2020 03:02 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டதிலிருந்து கைசுத்திகரிப்பான்களுக்கு (சானிடைசா்) சந்தையில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த குறையப் போக்க பிரபல மது தயாரிப்பு நிறுவனமான பகாா்டி தெலங்கானாவில் உள்ள அதன் ஆலையில் 70,000 லிட்டா் கைசுத்திகரிப்பானை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

உலக அளவில் கரோனா எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில் அந்நிறுவனம் 11 லட்சம் லிட்டா் கைசுத்திகரிப்பானை உற்பத்தி செய்வதாக உறுதியளித்துள்ளது. அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சொந்தமான ஆலைகளில் தயாரிக்கப்படும் கைசுத்திகரிப்பானை மருத்துவமனைகளுக்கு வழங்கவுள்ளதாக பகாா்டி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT