இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு

7th Apr 2020 08:10 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து 1,018 ஆக உள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கு இன்று (செவ்வாய்கிழமை) ஒருநாள் மட்டும் 150 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,018 ஆக உயர்ந்துள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT