இந்தியா

கேரளத்தில் குளத்தில் விழுந்த இரண்டு காட்டு யானைகள் மீட்பு

5th Apr 2020 03:48 PM

ADVERTISEMENT

கேரளத்தில் சேறு நிறைந்த குளத்தில் சிக்கிக்கொண்ட 2 காட்டு யானைகள் மீட்கப்பட்டன.

கேரள மாநிலம், வயநாட்டின் மெப்பாடியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திலுள்ள குளத்தில் இன்று அதிகாலை 2 யானைகள் விழுந்தன. சேறு நிறைந்து காணப்பட்டதால் யானைகளால் குளத்திலிருந்து வெளியேற முடியவில்லை. 

இதனைக் கண்ட அப்பகுதியினர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அங்க விரைந்த அதிகாரிகள் ஜே.சி.பி உதவியுடன் யானைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் குளத்திலிருந்து மீட்கப்பட்டன. 

இதையடுத்து அந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT