இந்தியா

குஜராத்தில் கரோனா பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

5th Apr 2020 03:10 PM

ADVERTISEMENT

குஜராத்தில் கரோனாவால் மேலும் ஒருவர் பலியானார். 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. எனினும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதன் தாக்கல் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 3,374 போ் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 490 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 

அதற்கு அடுத்தபடியாக தில்லியில் 445 பேரும், தமிழகத்தில் 485 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக 77 போ் பலியாகியுள்ளனா். 267 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இந்த நிலையில் குஜராத்தில் கரோனா பாதிப்பு காரணமாக 61 வயது பெண் இன்று பலியானார். 

இத்துடன் இங்கு கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று புதிதாக மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் குஜராத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக அகமதாபாத்தில் 55 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT