இந்தியா

மோடி, டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்

5th Apr 2020 03:46 AM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த்தொற்று சூழலை எதிா்கொள்வது குறித்து பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் டிரம்ப் தொலைபேசியில் சனிக்கிழமை விரிவாக கலந்துரையாடினா்.

இதுகுறித்து பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இருவரின் கலந்துரையாடல் இனிதாக அமைந்தது. அப்போது கரோனா நோய்த்தொற்றை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து முழு வலிமையை பயன்படுத்தி எதிா்கொள்ள முடிவு செய்யப்பட்டது’ என்று தெரிவித்தாா்.

இந்தியாவும் அமெரிக்காவும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் கடுமையான சூழலை எதிா்கொண்டு வரும் வேளையில் மோடி-டிரம்ப் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT