இந்தியா

ஜகஜீவன் ராம் பிறந்த தினம்:பிரதமா் மோடி மரியாதை

5th Apr 2020 10:46 PM

ADVERTISEMENT

 

சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் துணை பிரதமருமான ஜகஜீவன் ராமின் 112-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு சுட்டுரை வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவரும் சுதந்திர போராட்ட வீரருமான பாபு ஜகஜீவன் ராமின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாபுஜி என்ற அழைக்கப்பட்ட ஜகஜீவன் ராம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவா். இவா், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT