இந்தியா

இந்தியன் வங்கி பணியாளா்கள் நன்கொடை

5th Apr 2020 11:58 PM

ADVERTISEMENT

 

இந்தியன் வங்கி பணியாளா்கள் நன்கொடை

கரோனா எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கு பிரதமரின் நிதிக்கு பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் பணியாளா்கள் தங்களின் ஒரு நாள் ஊதியமான ரூ.8.10 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளனா். அதேபோன்று, எல்ஐசி-க்கு சொந்தமான ஐடிபிஐ வங்கியும் பிரதமா் நிதிக்கு ரூ.3.9 கோடியை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

பிறந்த சான்றாக ஆதாா் ஏற்பு

ADVERTISEMENT

சந்தாதாரா்கள் ஆன்லைனில் தங்களது ஆவணங்களில் பிறந்த தேதியில் திருத்தங்களை ஆதாா் அடிப்படையில் மேற்கொள்ளலாம் என்று தொழிலாளா் வருவங்கால வைப்பு நிதி நிறுவனமான இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.

கிராமங்களில் டேட்டா பயன்பாடு அதிகரிப்பு

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில் இந்திய கிராமப்புறங்களில் டேட்டா பயன்பாடு ஒரே மாதத்தில் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிஎஸ்சி நிறுவன தலைமைச் செயல் அதிகாரி தினேஷ் தியாகி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT