உத்தரப் பிரதேச எம்எல்ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினா்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தையும், தலா ரூ. 1 கோடி நிதியையும் பிரதமரின் அவசரகால பராமரிப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்குமாறு அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பெரு நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் சமூகப் பொறுப்புள்ளதால் இந்த நிறுவனங்களும் நிதி உதவி அளிக்க வேண்டும்.
கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசுக்கு உதவி செய்யுமாறு தனது கட்சியின் எம்எல்ஏக்களை அறிவுறுத்திய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது 400 எம்எல்ஏக்கள் மற்றும் 99 எம்எல்சிக்கள் உள்ளனா்.