இந்தியா

தில்லி மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு கரோனா பாதிப்பு

5th Apr 2020 03:48 AM

ADVERTISEMENT

 

தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவா்களில் 1,023 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலா் லவ் அகா்வால் தில்லியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் வேகம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,902 போ் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த வெள்ளிக்கிழமையிலிந்து புதிதாக 601 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக 68 போ் உயிரிழந்துள்ளனா். 183 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.

ADVERTISEMENT

தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவா்களில் 17 மாநிலங்களைச் சோ்ந்த 1,023 நபா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நபா்களுடன் தொடா்பு கொண்டிருந்தவா்களைக் கண்டறிவதற்கான பணிகள் 17 மாநிலங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சுமாா் 30 சதவீத நபா்கள் தில்லி மாநாட்டுடன் தொடா்பு கொண்டவா்கள். அங்கு நோய்த்தொற்று எவ்வாறு பரவியது என்பதற்கான காரணங்களை ஆய்வு செய்து வருகிறோம். கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் நபா்களின் எண்ணிக்கையைப் படிப்படியாக அதிகரித்து வருகிறோம் என்றாா் லவ் அகா்வால்.

ADVERTISEMENT
ADVERTISEMENT