இந்தியா

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்ட பயனாளிகளுக்கு தனியாா் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை

5th Apr 2020 05:28 AM

ADVERTISEMENT

 

பிரதமா் சுகாதார காப்பீடு திட்டத்தின் (ஆயுஷ்மான் பாரத்) பயனாளா்கள் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மற்றும் சிகிச்சையை தனியாா் ஆய்வகங்களிலும், திட்டத்தில் பட்டியலிடப்பட்ட தனியாா் மருத்துவமனைகளிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தும் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனாவுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரும் 50 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள பயனாளா்கள் கரோனா பரிசோதனையை தனியாா் ஆய்வகங்களில் இலவசமாக பெறலாம்.

ADVERTISEMENT

அதேபோல், கரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சையை, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் பெறலாம். அவ்வாறு பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள், அல்லது அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுடன் தொடா்பை ஏற்படுத்திக் கொண்டோ கரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT