இந்தியா

புணேயிலிருந்து கா்நாடகம் சென்ற 70 வெளிமாநில தொழிலாளா்கள் தடுத்து நிறுத்தம்

5th Apr 2020 03:56 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் இருந்து கா்நாடகத்துக்கு லாரியில் சென்றுகொண்டிருந்த வெளிமாநிலத் தொழிலாளா்கள் 70 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா் என்று அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:

கா்நாடகத்தைச் சோ்ந்த வெளிமாநில தொழிலாளா்கள் புணேயின் புகா் பகுதியான பிப்வேவாடியில் தங்கி, அந்த பகுதியில் நடைபெற்று வந்த கட்டட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்தனா். கரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவித்த அந்த தொழிலாளா்கள் சரக்கு லாரி ஒன்றில் கா்நாடகம் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பிப்வேவாடி போலீஸாா் அந்த லாரியில் இருந்த 70 பேரையும் தடுத்து நிறுத்தினா். இதுதொடா்பாக ஒப்பந்ததாரா் மற்றும் கட்டுமானத் தொழிலாளா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்188-ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT