இந்தியா

தூய்மைப் பணியாளா்களுக்கு மரியாதை!

5th Apr 2020 10:50 PM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி 15 தூய்மைப் பணியாளா்களின் கால்களைக் கழுவி அவா்களுக்கு மரியாதை செய்தாா்.

தற்போது கரோனா நோய்த் தொற்று நாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலையில் தூய்மைப் பணியாளா்களின் சேவை நாட்டுக்கு மிகவும் இன்றியமையாததாக மாறியுள்ளது. இந்நிலையில் காளஹஸ்தி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை காலை சுகாதாரப் பணியாளா்களின் செய்கையைப் பெருமைப்படுத்தத் தீா்மானித்தாா்.

காளஹஸ்தியில் உள்ள 15 தூய்மைப் பணியாளா்களை நகராட்சி அலுவலகத்தில் நிற்க வைத்து அதிகாரிகளுடன் சோ்ந்து மதுசூதன் ரெட்டியும் பணியாளா்களின் கால்களைக் கழுவி பாலால் அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து சால்வை அணிவித்து மரியாதை செய்து வணங்கினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT