இந்தியா

ஊரடங்கால் மாட்டிக் கொண்ட மகன்; தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்த மகள்

1st Apr 2020 01:37 PM

ADVERTISEMENT

ஹூபலி: ஊரடங்கு உத்தரவால் எத்தனையோ திருமணங்களும், இறுதிச் சடங்குகளும் முக்கிய உறவுகள் இல்லாமலேயே நடந்து முடிந்துவிட்டன. கர்நாடக மாநிலத்தில், ஊரடங்கு உத்தரவால் மகன் சொந்த ஊருக்கு வர முடியாமல் மாட்டிக் கொள்ள, மகளே தந்தைக்கு இறுதிச் சடங்கு நடத்தி முடித்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம் ஹூபலியைச் சேர்ந்தவர் அஷோக் சௌஹான் (60).  உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்தார்.

மருத்துவமனையில் இருந்து உடல் ஆம்புலன்ஸ் மூலம் இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால், தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டிய மகனோ, கடக் பகுதியில் கூலி வேலைக்குப் போன இடத்தில் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு வர முடியாமல் சிக்கிக் கொண்டார்.

உறவினர்கள் யாரும் வராமல் வெறும் 8 - 10 பேர் மட்டுமே இருந்த நிலையில், யார் இறுதிச் சடங்குகள் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது, அசோக்கின் மகள், தானே முன்வந்து இறுதிச் சடங்குகளை செய்தார்.

ADVERTISEMENT

மலர் மாலைகளோ, இறுதிச் சடங்கு செய்யும் நபர்களோ இல்லாமல் தந்தைக்கு மகளே இறுதிச் சடங்கு செய்து முடித்திருக்கிறார். ஊரடங்கு உத்தரவால் உடலை வீட்டுக்குக் கூட எடுத்துச் செல்ல முடியாமல் நேரடியாக இடுகாட்டுக்கே கொண்டு வந்ததாக அசோக்கின் மனைவி கண்ணீருடன் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT