இந்தியா

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

22nd Sep 2019 01:06 AM

ADVERTISEMENT

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 பேர் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர்.
பெங்களூரு, ஆளுநர் மாளிகையில் செப். 23-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக வழக்குரைஞர்களான சிங்கபுரம் ராகவாச்சார் கிருஷ்ணகுமார்,  அசோக் சுபாஷ்சந்திரகினகி,  சூரஜ் கோவிந்த்ராஜ், சச்சின் சங்கர் மகதம் ஆகிய 4 பேர் பதவியேற்க இருக்கிறார்கள்.  இவர்களுக்கு ஆளுநர் வஜுபாய்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த விழாவில்,  முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர்கள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயணா, லட்சுமண்சவதி, அமைச்சர்கள், கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஹோகா, நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT