இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாவதற்கு நேருவே காரணம்: அமித் ஷா

DIN


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாவதற்கு இந்தியாவின் முதல் பிரதமர் நேருவே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது தொடர்பாகவும், மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காகவும் மும்பையில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 

"சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக காங்கிரஸ் பார்க்கிறது. நாங்கள் அந்த கோணத்தில் இதைப் பார்க்கவில்லை. நீங்கள் (ராகுல் காந்தி) தற்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளீர்கள். ஆனால், பாஜகவினர் 3 தலைமுறையாக காஷ்மீருக்காகவும், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காகவும் உயிரையே அர்ப்பணித்துள்ளனர்.   

பாகிஸ்தானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை நேரு தவறான நேரத்தில் போடாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரே தோன்றியிருக்காது. அந்த சமயத்தில் ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவியிருந்த பாகிஸ்தானியர்களுக்கு எதிராக இந்திய ராணுவம் வலிமையாக போரிட்டு வந்தது. இந்த விவகாரத்தை நேருவுக்குப் பதிலாக சர்தார் படேல் கையாண்டிருக்க வேண்டும். 

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு துப்பாக்கிச்சூடே நடைபெறவில்லை. காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவவில்லை. வரும் நாட்களில் அங்கு பயங்கரவாதம் ஒடுக்கப்படும்.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்களா அல்ல எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா என்பதை ராகுல் காந்தியும், சரத் பவாரும் மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே கட்டமாக அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, அக்டோபர் 24-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT