இந்தியா-பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: அன்டோனியோ குட்டெரெஸ்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கேட்டுக் கொண்டால் காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.

ஐ.நா.வின் 74-ஆவது பொதுச் சபை கூட்டம் வரும் 24-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தின் பொது விவாதத்தில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது தொடர்பான பிரச்னையை பாகிஸ்தான் எழுப்ப முடிவு செய்துள்ளது. 
இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவது:
காஷ்மீர் பிரச்னையை தீர்த்துக் கொள்வதற்கு,  இந்தியா- பாகிஸ்தான் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைதான் முழுமையானதாகவும், அத்தியாவசியமானதாகவும்  இருக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான திறன் ஐ.நா.விடம் உள்ளது. இருப்பினும், இரு நாடுகளும் ஒப்புக் கொண்டால் மட்டுமே ஐ.நா. எடுக்கும் சமரச முடிவுகள் இருதரப்பிலும் அமல்படுத்தப்படும்.
இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, மனித உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com