உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு  

கோவாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கௌன்சில் கூட்டத்துக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார். 
ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கோவாவில் 37-ஆவது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கௌன்சில் கூட்டத்துக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

புதிய நிறுவனங்கள் 17.01 சதவீதம் மட்டும் கார்ப்பரேட் வரி செலுத்தினால் போதும். 2023-ம் ஆண்டு வரை இந்த சலுகைகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டு நிறுவனங்களுக்கும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும், பெருநிறுவன வரி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய உற்பத்தியை அதிகரிக்க, 2019-20 நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 2019 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் புதிய உள்நாட்டு நிறுவனங்களும் உற்பத்தியில் புதிய முதலீட்டை 15% வீதத்தில் வருமான வரி செலுத்த அனுமதிக்கப்படுகிறது.

வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, 2019-20 நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு ஊக்கத்தொகையும் விலக்குகளும் பெறாத உள்நாட்டு நிறுவனங்களுக்கு 22 சதவீதம் என்ற விகிதத்தில் வருமான வரி செலுத்தலாம்.

ஊக்கத்தொகை அல்லது விலக்குகளைத் தொடர்ந்து பெறும் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க, அவர்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி தற்போதுள்ள 18.5 சதவீதத்தில் இந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மூலதனச் சந்தையில் நிதி ஓட்டத்தை உறுதிப்படுத்துவதற்காக, ஜூலை 2019 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மேம்பட்ட கூடுதல் கட்டணம் ஒரு நிறுவனத்தின் பங்கு விற்பனை செய்வதிலிருந்தோ அல்லது பங்கு சார்ந்த நிதியின் மூலமாக ஏற்படும் ஆதாயங்களுக்கு பொருந்தாது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குகள் விற்பனை செய்வதால் ஏற்படும் மூலதன ஆதாயங்களுக்கு மேம்படுத்தப்பட்ட கூடுதல் கட்டணம் பொருந்தாது. இந்த நிறுவனங்களுக்கான வரி விகிதம் அனைத்து கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் உட்பட 25.17 சதவீதமாக இருக்கும்.

ஏற்கனவே 5 ஜூலை 2019 க்கு முன்னர் பங்குகளை வாங்குவதற்கான பொது அறிவிப்பை வெளியிட்டுள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு அதற்காக எந்த வரியும் விதிக்கப்படாது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com